வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்!

 

8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்!

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து கடந்த மே 18-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும்.

எனவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி உள்பட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார்.

இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறக்கிறார்.

759 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன