வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6
Shadow

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம் மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்!

 

 

தமிழகத்திலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்தபடியே இருப்பதால் தமிழக சுகாதார துறை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

இந்த சூழலில் தமிழக சுகாதார துறை செயலாளர் ஆக இருந்த பீலா ராஜேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் ஏற்கனவே இந்த பதவியில் இருந்து அனுபவம் பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் இப்போது மீண்டும் சுகாதார துறை செயலாளர் ஆக நியமிக்கபட்டுள்ளார்.

இப்போது ராதாகிருஷ்ணன் சென்னையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஜெ., ஆட்சி காலத்திலும், சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போதும் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன்.

சென்னையில் வழக்கத்தை விட அதிக தொற்று பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

552 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன