புதன்கிழமை, ஜூன் 10
Shadow

“ராஜ மாதா” புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்!

 

 

“ராஜ மாதா” புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்! சிக்கிய டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட நடிகை.

கொரானா ஊரடங்கால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி பல மாதங்களுக்கு பின் இப்போது தான் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. இருந்த போதும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

இந்த சூழலில் இந்த 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை அரசு திறந்துள்ளது.

பக்கத்து மாநிலமான பாண்டியிலும் மதுக்கடைகளை திறந்து இருக்கிறார்கள்.

நேற்று முந்தினம் கானத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசுகாரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காரில் பெட்டியாக மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்டதை கண்டுபிடித்தனர்.

டிரைவரிடம் விசாரித்தால் அந்த கார் பிரபல ந்டிகை நீலாம்பரி புகழ், ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமானதாம்.

மது பட்டில்களுடன் கார் சிக்கியதும் கானத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சென்ற ரம்யா கிருஷ்ணன் தன் சொந்த ஜாமீனில் டிரைவரை அழைத்து சென்றாராம்.

ஊரடங்கு நேரத்தில் பிரபலமான ஒருவரின் காரில் இவ்வளவு மது புட்டிகள் சிக்குவது இதுதான் முதல் முறை.

சிக்கிய ரம்யா கிருஷ்ணன் டிரைவர் யாருக்காக அவ்வளவு பாட்டில்கள் வாங்கி வந்தார்.

ஊரடங்கை மீறி இரவு நேர பார்ட்டிகள் எதுவும் நடக்கிறதா என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும்

1,245 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன