புதன்கிழமை, ஜூன் 10
Shadow

ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு

 

ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு

நாடு முழுவதும் கொரானா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பலகட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

ஆனால் மத்திய அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

அந்தவகையில் மீண்டும் அவர் மத்திய அரசை கடுமையாக குறை கூறியுள்ளார்.மத்திய அரசின் 4-ம் கட்ட ஊரடங்கிலும் நோய்த் தொற்று அதிகரித்து இருப்பதாக வரைபடம் ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ள அவர், ‘ மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கிறது’ என்ற மேற்கோள் ஒன்றையும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

அதே போல, உலக அரங்கில் கொரனாவை விரட்ட நடக்கும் ஓட்டத்தில் இந்தியா தவறான பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு, நோய்த் தொற்று பாதிப்பில் 11வது இடத்தில் இருந்து இப்போது 4வது இடத்துக்கு வந்ததை சுட்டிக் காட்டி உள்ளார்.

547 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன