
கொரானாவால் முதல்வரின் தனிச் செயலாளர் பலி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.
நேற்று வரை சென்னையில் 34 ஆயிரத்து 245 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரானாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரானா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கொரானா தொற்று உறுதியான தாமோதரன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
427 Views
