திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

தோனி பட நடிகர் தற்கொலை அதிர்ச்சியால் அவரது அண்ணி மரணம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் அடுத்தடுத்து சோகம்!

 

 

தோனி பட நடிகர் தற்கொலை அதிர்ச்சியால் அவரது அண்ணி மரணம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் அடுத்தடுத்து சோகம்!

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரரின் மனைவி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் நேற்று முதல் நாள் தற்கொலை செய்து கொண்டார். மர்மமான முறையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்

மன அழுத்தம் காரணமாக இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்தவர். கை போச்சே என்னும் இந்தி படத்தில் அறிமுகம் ஆனவர்.
இவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். முக்கியமாக சுஷாந்த் சிங்கின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதோடு சுஷாந்த் சிங்கின் காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்னும் முழுமையாக சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரரின் மனைவி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் பெயர் சுஷா தேவி. பீகாரை சேர்ந்த இவர் தற்போது மும்பையில் இருக்கிறார். நேற்று சுஷாந்த் சிங் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் இவர் மயங்கி விழுந்துள்ளார். அங்கேயே அவருக்கு இதய துடிப்பு அதிகம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சுஷா தேவி அதிர்ச்சி தாங்க முடியாமல் மரணம் அடைந்தார். இறுதி சடங்கு நிகழ்வின் போதே இவர் மரணம் அடைந்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்தி கேட்டதில் இருந்தே சுஷா சாப்பிடவில்லை. தூங்கவில்லை என்கிறார்கள். சுஷாந்த் சிங்கை சுஷாதான் அக்கா போல இருந்து கவனித்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுஷாவின் திடீர் மரணம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இன்னொரு பக்கம் சுஷாந்த்சிங் தற்கொலையை தொடர்ந்து அவரின் அப்பாவின் உடல்நிலை தற்போது மோசம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளது. சுஷாந்த் சிங் அப்பா கிருஷ்ணா குமார் சிங் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது. சுஷாந்த் சிங் அப்பா கிருஷ்ணா குமார் சிங் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது. அவர் ஏற்கனவே பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்திலும் பிரச்சனை இருந்துள்ளது. தற்போது அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மரணம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன