வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் அவரது நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி சானியாமிர்சா சர்வதேச  டென்னிஸ் தொடரை முடித்துவிட்டு மகனுடன் இந்தியாவில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கொரானா பரவல் காரணமாக இரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருவரும் கடந்த ஐந்து மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது.

இந்த நிலையில்
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி  வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளது. 29 நபர்கள் கொண்ட அணியில் சோயப்மாலிக் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த ஐந்து மாதங்களாகத் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் எனது மனைவியையும், மகனையும் சந்திக்க சிறப்பு அனுமதி கேட்டார் மாலிக். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது

பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து சென்றவுடன் நான்கு வாரம் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இதிலிருந்து சோயப் மாலிக்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலிக் இந்தியா சென்று குடும்பத்தைச் சந்தித்து விட்டு ஜூலை 24ம் தேதி இங்கிலாந்து திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரானா சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே தெரியாமல் இருக்கும் போது கிரிக்கெட் போட்டிகள் திட்டமிடப்பட்டு உள்ளது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இந்த போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி உண்டா அல்லது தொலைக்காட்சி நேரலையா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

268 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன