
முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.
கொரானா வைரஸ் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு வைரஸ் தாக்காது என்று உலக சுகாதார மையம் பல மாதங்களாக சொல்லி வருகிறது.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உட்பட சில பிரபலங்கள் ஆரம்பத்தில் இருந்தே மாஸ்க் அணிய மறுத்து வந்தார்.
இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பில் சிக்கி அபாய கட்டம்வரை சென்று உயிர்பிழைத்தார்.
ஆனால், அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்ட போதும் மாஸ்க் அணிய மறுத்தார் டிரம்ப்.

ஆனால், அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அதிபர் டிரம்ப் மாஸ்க் அணியாமலேயே வந்து பேட்டியளித்து செல்வார்.
இந்நிலையில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூற சென்றார். அப்போது முதன் முறையாக மாஸ்க் அணிந்து சென்றார். மேலும் ‘‘எந்த இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார் டிரம்ப்.
எது எப்படியோ உலக வல்லரசு நாட்டின் அதிபர் முகத்திலும் துணியை மூடி தான் தான் உலகிலேயே மிக பெரியவன் என்பதை வைரஸ் காட்டியுள்ளது.

