சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது – மும்பை ஆஸ்பத்திரி தகவல்

 

அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது – மும்பை ஆஸ்பத்திரி தகவல்

கொரானா தொற்று காரணமாக அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் , பேத்தி ஆராத்தியா ஆகியோருக்கு கொரானா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று  மராட்டிய  சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

அமிதாப் , அபிஷேக் இருவரும் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் டிவிட்டரில் பதிவு போட்டு உள்ளனர்.

658 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன