வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

பீனிக்ஸ் பறவைபோல ரெடியாகும் ஜெ., நினைவிடம் டிசம்பருக்கு முன் திறக்கப்படலாம்!

 

பீனிக்ஸ் பறவை போல தயாராகும் ஜெ., நினைவிடப் பணிகள் ஆகஸ்ட்டில் முடிந்து டிசம்பருக்குள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறதாம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் ரூ.51 கோடியில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அழகிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. சமாதி அருகில் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்படுகிறது.

95 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. துபாயில் இருந்து வரவழைக்கப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆலோசனைப்படி கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

ஆகஸ்டு மாதம் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

செப்டம்பர் மாதம் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். அதற்கு பிறகு பீனிக்ஸ் பறவையாக ஜெயலலிதா நினைவிடத்தை பொது மக்கள் பார்க்கப் போகிறார்கள்.

451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன