வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

பேரரிவாளன் பரோல் மனு மீது முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்குகிறதா அரசு -கோர்ட் அதிருப்தி

 

 

பேரறிவாளன் பரோல் வழக்கில் முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல அரசு தூங்குகிறதா… கோர்ட் கடும் அதிருப்தி!

பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் வழங்கக்கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் அரசு உரிய நேரத்தில் கடமையாற்றமல் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டு உள்ளீர்களா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு கடந்த முறை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது அப்போது அரசு தரப்பில், கடந்த 2019 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் பரோல் வழங்க முடியும் என தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.


மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மீண்டும் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது போன்ற சூழலில் கூட தகுந்த உத்தரவை பிறப்பிக்காத சிறை அதிகாரிகள் மீது ஏன் 1 லட்சம் அபராதம் விதிக்கக் கூடாது? பரோல் அளிப்பதும், நிராகரிப்பதும் உரிமை தான், ஆனால் முடிவெடுக்க வேண்டும்

கடந்த மார்ச் மாதம் மனு அளித்து, ஏப்ரல் மாதம் நினைவூட்டல் அளிக்கப்பட்டும் ஏன் ஜூலை வரை நடவடிக்கை இல்லை? அரசு உரிய முறையில் செயல்படாததால் தான் நீதிமன்றத்தின் வழக்கு சுமை அதிகரிக்கிறது.
அவர்கள் ஏற்கனவே சிறையில் உள்ளனர்,

தற்போது வழக்கறிஞருக்கு வேறு செலவு செய்ய வேண்டுமா,களுக்கு ஒரு முறை அவர்கள் இதே போன்று நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. அரசு, சிறைத்துறை, அரசு உரிய நேரத்தில் கடமையாற்றினால் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. கும்பகர்ணன் மாதிரி தூங்கி கொண்டுள்ளீர்களா?
அவர்கள் ஏற்கனவே சிறையில் உள்ளனர்.

தற்போது வழக்கறிஞருக்கு வேறு செலவு செய்ய வேண்டுமா? அரசுக்கு வழக்கு செலவு அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், வெள்ளிக்கிழமைக்குள் அரசு பதிலளிக்க உத்தரவு உத்தரவிட்ட வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

480 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன