திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

சீரியல் போல சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும்!

 

சீரியல் போல சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும்!

சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கோரி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை பசுமை வழிச்சாலை, முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் டிவி சீரியல் ஷூட்டிங் போல சினிமா ஷூட்டிங் நடத்துவதற்கு அனுமதி அளிக்க கோரிக்கை மனு அளித்தனர். அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார்.

404 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன