செவ்வாய்க்கிழமை, மார்ச் 19
Shadow

டேனி சினிமா எப்படியிருக்கு – கோடங்கி விமர்சனம்

 

 

அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி, கவின், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், டேனி என்ற நாய் இன்னும் சிலர் நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

போலீஸ் கிரைம் படங்கள் பெரும்பாலும் நகரங்களில் மட்டுமே படம் பிடிக்கப்படும் . ஆனால் டேனி அதில் வித்தியாசம் காட்ட
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவமாக வைக்கிறார்கள்.

ஒருகிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக வரும் வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொல்லப்பட இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார்? என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, இயல்பாகவே கம்பீரமான தோற்றத்தில் இருப்பார். அவரின் கம்பீர தோற்றத்துக்கு காட்டிய அக்கறையை கதையில் அவர் கதாபாத்திரத்தில் காட்டியிருக்கலாம்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தஞ்சை மக்களுக்கே உரித்தான ஸ்டைலில் தனது கேரக்டரை செய்திருக்கிறார். சில இடங்களில் அவரை இன்னமும் வேலை வாங்கி இருக்க வேண்டும்.

டேனி என்ற பெயரில் வலம் வரும் நாய்க்கு தலைப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தமான முக்கியத்துவம் படத்தில் இல்லாதது பெருங்குறை.

. அந்த டேனி நாயை பராமரிப்பவராக நடித்திருக்கும் கவின், அவரது அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் உள்ளிட்ட பலரும் கவனம் ஈர்க்கவில்லை.

படத்தில் நடக்கும் கொலைக்கான காரணமும், கொலையாளியின் பின்னணியையும் விவரிக்கும் இயக்குநர் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவில்லாமல் இருப்பது பெரிய மைனஸ்.

பல நேரம் வரலட்சுமி பேசும் வசனங்கள் புரியாமல் படபடவென கடந்து போவதால் கதை புரியாமல் சலிப்பு தட்டுகிறது.

மொத்தத்தில் நடிகர்கள், நடிகை, நாய், டைட்டில் என பலவற்றில் கவனம் செலுத்திய இயக்குனர் கொஞ்சம் கதையிலும், அதைவிட கொஞ்சம் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் OTT தளத்தில் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெறாத வரிசையில் சொல்லாமலேயே சேர்ந்து கொள்ளும் இந்த டேனி!

798 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன