
ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா சென்ற நடிகை நயன்தாரா வைரல் ஆகும் படம்.
வைரஸ் பீதியால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் விமானத்தில் பறந்திருக்கிறார்கள்.
அதுவும் தாங்கள் 2 பேர் மட்டுமே அந்த தனி விமானத்தில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு பறந்திருக்கிறார்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் சென்னை திரும்ப திட்டம்.
தனி விமானத்தில் சென்றாலும் விமானத்தில் இருந்து இறங்கி செல்லும்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் மாஸ்க் அணியாமல் செல்வதை யாரும் சர்ச்சை ஆக்காமல் இருந்தால் சரி.
738 Views
