வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

 

 

இதயத்தை கொடுப்பதும், அதை உடைப்பதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை!

பிக்பாஸ் சீசன்4 தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் மெல்ல ஏற்பட தொடங்கி உள்ளது.
சனிக்கிழமை இரவு போட்டியாளர்களோடு பேசிய கமல் மறைந்த நடிகை மனோரமாவின் நினைவு நாளை நினைவு கூர்ந்தார். மனோரமா இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை , என் 4 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் மறைவுக்கு முன்பாக கடைசியாக கலந்து கொண்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்றார்.

அதே போல பாலாஜிக்கும், சம்யுக்தாவுக்கும் சனம்ஷெட்டி உடைந்த இதய முத்திரையை கைகளில் பதித்தார். ஆனால் இந்த இரண்டு பேர்களுக்கும் கடந்த முறை அன்பான இதய முத்திரையை குத்தியிருந்தார். இந்த முறை அதை மாற்றி இதயத்தை உடைத்து முத்திரை பதித்தார்.

அதே நேரம் அனிதா சம்பத், ரேகா இருவருக்கும் அன்பான இதய முத்திரையை பதித்தார் ஷனம்ஷெட்டி.

இதை பார்த்து விட்டுதான் கமல் பேசும்போது, “இதயத்தை கொடுப்பதும், அதை உடைப்பதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அனிதாவும் சுரேஷும் மனக்கசப்பில் இருந்து மீண்டுவிட்டதாக சொன்னாலும் சுரேஷ் மோதலை தொடர வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

666 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன