சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு

 

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் – பாஜகவில் இணைந்த குஷ்பு பேட்டி

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார்.

பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர்.

இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்.

காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை.

6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா?

காங்கிரஸ் கட்சியினர் நடிகையாகத்தான் என்னை பார்த்தனர்.

எல்.முருகன் எடுத்த முயற்சியால்தான் நான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்றார் குஷ்பு.

199 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன