வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி மிரட்டல் வர ப்தறிய போலீஸ் நடிகர் விஜயகாந்த் வீட்டில் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம ஆசாமி மிரட்ட பதறிய போலீஸ் தனுஷ் வீட்டிலும் சோதனை நடத்தியது. அங்கும் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

இந்த மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே நடிகர் சூர்யா வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டல் விடுத்தவர் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் போலீசார் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறார்கள்.

168 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன