
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர். ஷாக் ஆன பாமக வட்டாரம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அம்மா தவசாயி சமீபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு ஆறுதல் சொல்லி இரங்கல் அறிக்கை வெளியிட்டனர்.
இந்த சூழலில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தேர்தல் பரபரப்பு சூழலில் இந்த ஆறுதல் சந்திப்பு கூட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஒட்டுமொத்த வன்னியர்களும் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என தேர்தலுக்கு தேர்தல் சொல்லி தொகுதிகளை வாங்கிக் கொள்ளும் பாமகவுக்கு முதல்வரை வன்னியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைரஸ் காரணத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் எந்த பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை. முக்கியமான விஷ்யங்களாக இருந்தாலும் காணொளி காட்சி மூலம் பேசிக் கொள்கிறார்கள். இப்போது தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் தொடங்கி விட்டது.
இந்த நேரத்தில் இதுவரை அரசியல் கட்சியாக இல்லாமல் வெறும் சமுதாய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த வன்னியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி அகில இந்திய அளவில் அரசியல் கட்சியை பதிவு செய்து அதன் மூலம் இந்த 2021 தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
இந்த சூழலில் முதல்வரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
