புதன்கிழமை, ஜூன் 10
Shadow

பாடகர் வேல்முருகன் வெளியேற பாடகி ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

 

தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் 25 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 17-வதாக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் நபராக வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.

இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று 18-வது போட்டியாளராக ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த சீசன்களை விட இந்த சீசனில் கடுமையான போட்டி நிலவுவதாக கமல்ஹாசனிடம் தெரிவிக்கிறார் சுசித்ரா.

327 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன