
சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வெள்ளியன்று மாலை மசூதியின் தெற்கு நுழைவாயிலை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இடையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சாலைத் தடுப்புகளையும் மோதித்தள்ளி விட்டு வேகமாகச் சென்ற அந்த கார் சுவற்றில் மோதி நின்றது
கார் வேகமாகச் செல்வதைக் கண்டதும் அதனைப் பின் தொடர்ந்து ஓடிவந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். அந்த நபர் அசாதாரண நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட போலீசார் அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

388 Views
