வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

சூரரைப் போற்று சாதனையா வேதனையா – கோடங்கி விமர்சனம்

 

எப்பவும் உண்மை சம்பவங்களுக்கு பலம் அதிகமா இருக்கும் வலி அதிகமா இருக்கும்னு சொல்லுவாங்க… அது சரிதான்னு நிரூபிச்ச படம்தான் சூர்யாவின் சூரரைப் போற்று.

வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த விமான பயணத்தை சாமானியனும் அனுபவிக்க முடியும் என போராடி வெற்றி பெற்றவர் கேப்டன் கோபிநாத்.

இவர் தொடங்கிய ஏர் டெக்கான் விமான நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

அவரின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை அவர் பட்ட கஷ்டங்களை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

சூர்யாவின் நடிப்பைவிட அபர்ணா பாலமுரளி அத்தனை அம்சம். நெருக்கமான காட்சிகளில்… பிரமாதம் போங்க… எங்கம்மா இருந்த… நல்ல இயக்குனர்கள் படங்களில் இனி அடிக்கடி அபர்ணா பாலமுரளியை பார்க்க முடியும்.
சூர்யாவுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஸ்கிரிப்… சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படும் போது மொட்டை மாடியில் கத்தும் காட்சிகள் உட்பட ஒரு சில சினிமாத்தனங்களை தவிர சூரரைப்போற்று போற்றக்கூடிய படம்தான்.

ஊர்வசிக்கு நல்ல ரோல்… ரொம்ப நாளைக்கு பிறகு ஊர்வசி மனசில் நிற்கிறார். பூ ராம் யதார்த்த புள்ளி.

காளிவெங்கட், கருணாஸ் என எந்த கதாபாத்திரமும் சோடை போகவில்லை.

விமானம் தரையிறங்கும் முதல் காட்சியிலேயே ரசிகனை தன்வசப்படுத்திக் கொள்கிறார் இயக்குனர் சுதாகொங்கரா.
படத்தின் மிகப்பெரிய பலம் ஜி.வி.பிரகாஷின் இசையும் மிரட்டும் பின்னணி இசையும்.

மொத்தத்தில் OTT தளத்தில் வந்து ரசிக்க வைத்த தமிழ்படம் சூரரைப்போற்று. தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

வேதனைகளை கடந்து சாதனை படைத்தவரின் வரலாற்று நிகழ்வு படமாகி கமர்ஷியலாக ஜெயிப்பதும் சாதனைதான்.

மதிப்பீடு – 4/5

– கோடங்கி

883 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன