புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

 

பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் புதிதாக வாங்கிய வீட்டிலும் குடியேறினார்.
கொரோனா அச்சுறுத்தலால் தேனிலவை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்று விட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி தேனிலவை கொண்டாடினார்.
கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக்குள் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும், மீன்களை ரசித்து பார்க்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
காஜலும் கௌதமும் தற்பொழுது கடலுக்கு அடியில் பிகினி ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றி உள்ளார் காஜல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன