செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 8
Shadow

சிம்புவின் ‘வேட்டை மன்னனா’ தளபதி விஜயின் 65?

 

தளபதி விஜயின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் சன் பிக்சரால் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் கதையை பொறுத்தவரை ஒரு ஜாலியான காமெடி கதை என்றுதான் ஆரம்பத்தில் கூறப்பட்டது. அப்படி ஒரு கதையைதான் தளபதி விஜயிடம் இயக்குனர் நெல்சன் கூறியிருந்தார் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் சிம்புவுக்காக இயக்குனர் நெல்சன் வேட்டை மன்னன் என்னும் படத்துக்காக ஒரு அதிரடியான ஸ்க்ரிப்ட் வைத்திருந்தார். ஆனால் அந்த படம் ட்ராப் ஆனது. தற்போது அந்த ஸ்க்ரிப்டைதான் தளபதி 65 படத்துக்காக சிறு மாற்றங்களுடன் எடுக்க இருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் தற்போது கிசுகிசுக்கப்படுகிறது.

498 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன