வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த சிம்பு

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலிருந்து இரண்டு போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இன்னொரு பக்கம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து சிம்பு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு அழகான பூச்செண்டை அனுப்பி வைத்துள்ளார். அதோடு அதில் தன்னுடைய வாழ்த்தையும் கூறி உள்ளார்.

 

277 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன