
இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சரியாக ஒரே நேர்க்கோட்டில் நிலா வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.03 மணிக்கு தொடங்கி நாளை நள்ளிரவு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படுகிறது.
இந்த நேரத்தில், நிலவின் நிழல் பூமியின் மேற்பரப்பின் மீது விழும். பொதுவாக சூரிய கிரகணம் பகலிலும் சந்திர கிரகணம் இரவிலும் நிகழும். இந்திய நேரப்படி இந்த கடைசி சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது. அதே நேரத்தில் சிலி, அர்ஜென்டைனா நாடுகளில் பகல் நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் அங்கு பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
291 Views
