ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டனர். இதனால் உண்டியல் வருவாய் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 35 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்து வருகிறது. ஊரடங்குக்கு பின்னர் தினமும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்து வந்தது.

முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு பிறகு நேற்று ரூ.3.23 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. 33 ஆயிரத்து 873 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 491 பேர் முடி காணிக்கை செலுத்தினர். கொரோனா ஊரடங்குக்கு முன்னர் சராசரியாக தினமும் ரூ.3 கோடி வரை உண்டியல் வசூலாகும். அந்த வருவாயை தற்போது எட்டியுள்ளதால் திருப்பதியில் மற்ற வருமானமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

276 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன