
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து வெளியிடப்பட்ட அரசாங்க வழிகாட்டுதல்களை மீறியதாகவும், மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, டெல்லியில் உள்ள தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 36 வெளிநாட்டினரை டெல்லி நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண்குமார் கார்க், 14 நாடுகளைச் சேர்ந்த 36 வெளிநாட்டவர்களை வழக்கிலிருந்து விடுவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 24’ம் தேதி, இந்திய தண்டனைச் சட்டம், தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
எனினும், வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் டெல்லியில் உள்ள தப்லிக் ஜமாத் சபையில் கலந்து கொண்ட வெளிநாட்டினர், விசா விதிமுறைகளை மீறியதாகவும், மதமாற்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதாகவும், கொரோனா பாதிப்பை அடுத்து வெளியிடப்பட்ட அரசாங்க வழிகாட்டுதல்களை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
