புதன்கிழமை, அக்டோபர் 7
Shadow

மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு!

விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன