ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கமல் -திமுக 2 பலவீனங்கள் ஒன்றிணைந்து அதிமுக என்ற இமயமலையோடு மோதப் பார்கிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

கமல் -திமுக 2 பலவீனங்கள் ஒன்றிணைந்து அதிமுக என்ற இமயமலையோடு மோதப் பார்கிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தனித்து போட்டி என கூறிவந்த கமல் தற்போது கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையை பார்கிறார். கூட்டணி அமைப்பது கட்சியின் விருப்பம் என்றும், கூட்டணி அமைக்கும்போது ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் உடன்பட வேண்டும் எனவும், கமல் ரஜினியுடன் இணைவது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். மேலும், அதிமுக மாபெரும் இயக்கம் என கூறிய அவர், 2021ல் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் எனவும், அதிமுகவை விட வலிமைப்பெற்ற சக்தி எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘கமலின் விஸ்வரூபம் படத்தை தடை செய்தபோது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், உள் ஒன்று வைத்து கமல்ஹாசன் பேசி வருவதாகவும், எம்.ஜி.ஆர் வாக்குகளை வாங்க நினைத்தால் கானல் நீராக தான் போவார்கள் என்றும், இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் உறுதிப்பட கூறினார்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணமும் 2021ல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் என குறிப்பிட்ட அவர், மற்ற கட்சிகள் எப்படி எம்.ஜி.ஆரை சொந்த கொண்டாடலாம் என்றும், கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் எனவும் விமர்சனம் செய்தார்.

உதயநிதி ஸ்டாலின், கமல் சந்திப்பு குறித்து பேசிய அவர் கமல் தற்போது பலவீனமாக இருக்கிறார் திமுக-வும் பலவீனமாக உள்ளது பலவீனங்கள் ஒன்றிணைந்து இமயமலையோடு மோதப்பார்கிறார்கள். இமயமலையோடு மோதினால் மன்டைதான் உடையும் என்றார்.

மூன்றாவது, நான்காவது அணி கூட ஆரம்பிக்கலாம். ஆனால் முதல் அணியாக அதிமுக தான் இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், ஓ.பி.எஸ் குறித்த கமல் கருத்திற்கு பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் கட்சி அதிமுக தான் என்றும், பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஓ.பி.எஸ் கருத்து கூறியிருப்பதாகவும், அது கொள்கை முடிவு. கட்சி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேடம் போட வேண்டிய அவசியம் அதிமுகவினருக்கு இல்லை என கூறிய அவர், திமுக ஒரு பச்சோந்தி போல் தங்கள் நிறத்தை மாற்றி வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்தது திமுக தான் என்றும் குற்றம்சாட்டினார்.

312 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன