ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சீரமைப்போம் தமிழகத்தை என்று கடந்த ஒரு வாரமாக தொடர் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். பிரச்சாரத்தில் அவர் அதிமுக ஆட்சியை கடுமையாக சாடி வருகிறார். போதாத குறைக்கு எம்.ஜி.ஆரின் நீட்சி, எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் சொல்லி வருகிறார்.

இந்நிலையில் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமல்ஹசானை கடுமையா தாக்கி பேசினார்.

‘’70வயதில் பிக்பாஸ் நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா? நாட்டுக்கு நல்ல செய்ய கமல் வரவில்லை. நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள். ஒரு குடும்பமும் உருப்படாது.’’ என்று சொன்ன முதல்வர்,

’’எம்.ஜி.ஆர். பட பாடல்களின் எத்தனை கருத்துக்கள் இருக்கின்றன. இவர் பாடல்களின் ஏதும் கருத்து உண்டா? ’’ என்று கேட்கிறார்

 

“கமிஷன் அரசை ஒழிப்போம். அடிமை அரசு”  என்றெல்லாம் அதிமுகவை கமல் கடுப்பேத்தி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

318 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன