சனிக்கிழமை, மே 2
Shadow

மாஸ்டர் வேற லெவலாம் சென்சாரில் கிடைத்த பாராட்டு!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான். அந்த வகையில் அவரது மாஸ்டர் திரைப்படம் நிலுவையில் உள்ள நிலையில் அந்த படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். படத்தை பார்த்த அதிகாரிகள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இளையதளபதி விஜயின் படமான மாஸ்டர் திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை அடுத்து ஜூன் மாதத்தில் வெளியாக இருந்தது. அதனால் மார்ச் மதத்திலும் இசை வெளியிட்டு விழாவும் நடந்தது. இப்படி இருக்க திடீரென ஏற்பட்ட லாக்டவுன் காரணத்தால் மாஸ்டர் படம் நிலுவையில் இருந்தது. மக்கள் பலரும் படம் எப்பொழுது வரும் என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக போவதாக தகவல் வெளியானது. இதனை கேட்ட ரசிகர்களும் ஷாக் ஆக தான் செய்தனர். அதன் பிறகு படத்தின் இயக்குனர் கண்டிப்பாக இது திரையரங்கில் தான் வெளியிட போவதாக ஆணித்தரமாக கூறிவிட்டார். இந்நிலையில் மாஸ்டர் படம் சென்சார் சான்றிதழ் வழங்குவதற்காக  அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்து சூப்பர் என்று கூறியுள்ளனர். ஒரு இடம் கூட போராக இல்லையாம். அதுவும் விஜய் சேதுபதியும், விஜயும் வரும் காட்சிகள் பின்னிப்பெடலெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சண்டை காட்சிகளை தான் மிரட்டியுள்ளாராம். சண்டை காட்சிகள் அதிகமிருப்பதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

348 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன