சனிக்கிழமை, மே 2
Shadow

அச்சு அசலாக சித்ராவை போலவே இருக்கும் கீர்த்தனா

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் வேதனையில் உள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சித்ராவை போலவே அச்சு அசலாக காட்சியளிக்கிறார் கீர்த்தனா தினகர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சித்ரா. அந்த சீரியலில் அவர் முல்லையாக நடித்தது மட்டுமல்லாமல் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

கதிர், முல்லைக்காக மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓடியது. அவர்களுக்கு எப்பொழுது ரொமன்ஸ் வரும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இதுவே அவருக்கு எமனாக வந்து முடிந்துள்ளது. ஹேமந்த் அவரிடம் சீரியலில் இப்படி நடித்ததை வைத்தே சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் நடித்த கால்ஸ் திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேறு வெளியானது.

சித்ராவின் முதல் படமும் அது தான் கடைசி படமும் அதுதான். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவலும் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் கீர்த்தனா தினகர் என்பவர் ஆச்சு அசலாக சித்ராவை போலவே காட்சியளிக்கிறார்.

இதனால் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலும் ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வெளியில் செல்லும் போதெல்லாம் சித்ரா போல இருப்பதாக சொல்லுவார்களாம். ஆனால் அதனை பெரிதாக கண்டுகொண்டதில்லை என்றும் இப்பொழுது அவரது ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் ஒரு ஆறுதலாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அப்போ அடுத்த முல்லை இவர் தானா?? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் சித்ராவாக நடிக்கப்போவதாக காவியாவை குறிப்பிட்டு வந்தனர்.

383 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன