
தமிழ் திரைத்துறை மட்டுமின்றி அனைத்து மொழி திரைத்துறைகளிலும் உச்ச நட்சத்திரங்கள் தங்களுடைய வாரிசுகளை அடுத்த தலைமுறை நடிகர்களமாக உருவாக்கி வருகின்றனர். இதில் மலையாள திரைத்துறை மட்டும் விதிவிலக்கல்ல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் ஏற்கவே இயக்குனராக இருந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் மோகன்லாலின் மகள் விஸ்மாயாவோ சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அவ்வப்போது தந்தையுடன் ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார்.
மோகன்லாலும் அவரது மகன் பிரணவும் உடல் எடை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் மோகன்லால் மகள் விஸ்மாயாவோ உடல் எடை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாமல் சற்று எடை அதிகமாக இருந்தார்.
இந்தநிலையில் தற்போது தனது உடல் எடை மீது கவனம் செலுத்த துவங்கிய மோகன்லால் மகள் தன் உடல் எடையை குறைப்பதற்காக தாய்லாந்தில் உள்ள ஒரு தீவிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சி எடுத்து உடல் எடையை குறைத்து கேரளாவுக்கு திரும்பி இருக்கிறார்.
தாய்லாந்தில் பிட்கோ என்கிற உடற்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து விதவிதமான பயிற்சி மற்றும் உணவு முறை மூலமாக சுமார் 22 கிலோ எடையை குறைத்துள்ளார்.
தாய்லாந்து செல்லும்போது தான் எப்படி இருந்தேன் என்பதையும் திரும்பி வந்தபோது எப்படி இருக்கிறேன் என்பதை காட்டும் விதமாக இரண்டு புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஸ்மாயா வெளியிட்டுள்ளார்.

