வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த ஜனாதிபதிக்கு அபராதம்!

முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு வெள்ளிக்கிழமை 3,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

COVID-19 தொற்றுநோய் பரவும் இந்த வேளையில், ​​சிலி அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவதுகட்டாயம் என விதிகளை விதித்தது, மீறினால் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இதனால் முகக்கவசம் அணியாத மக்களுக்கு அபராதங்களும், சிலருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி எடுத்த செல்பி டிசம்பர் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் விரலாக பரவியது. அதன் பின்னர் அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

சிலி கடலோர நகரமான கச்சுகுவா நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருந்ததாகவும் அப்போது ஒரு பெண் அவரை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படம் கேட்டதாகவும் பினெரா கூறினார்.

266 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன