வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

 

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ரத்தினபுரி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், கொரோனா நோய் தொற்று காலத்தில் முதலமைச்சர் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் எனவும், 2500 ரூபாய் பொங்கல் பரிசை மு.க. ஸ்டாலின் எப்படி தடுக்க நினைத்தாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் எனவும் தெரிவித்தார்.

முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த கேள்வி தேவையற்றது எனவும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் தெரிவித்தார்.

331 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன