ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

விவசாயிகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று தெரிகிறது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் இன்று 37-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் நேற்று முன்தினம் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் 4 கோரிக்கைகளில் 2-ல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 7-ம் சுற்று பேச்சுவார்த்தை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. 2 கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு விட்டது என மத்திய வேளாண் மந்திரி கூறியுள்ளதால் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி எல்லையில் போராட்ட நடத்தி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
மத்திய அரசுடனான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் 6-ம் தேதி குடில் – மனிசர் – பல்வால் பகுதியில் பேரணி நடத்தப்படும்.
மத்திய அரசு விவசாயிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று தெரிகிறது. ஷாகீன் பாக் போராட்டத்தை மத்திய அரசு கலைத்துவிட்டது. அதேபோன்று இங்கும் செய்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது. அந்த நாள்களை இனி ஒருபோதும் வரப்போவது இல்லை.
ஜனவரி 4-ம் தேதி மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் விவசாயிகள் முடிவெடுக்க வேண்டும்.
50 சதவிகித பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்று பரவி வரும் தகவல் தவறானது. எங்களின் இரண்டு மிக முக்கிய கோரிக்கைகளான, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டரீதியிலான உத்தரவாதம் வழங்கவேண்டும் ஆகியவை இன்னும் நிலுவையில் உள்ளன.
166 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன