
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், தமிழக வீரர் ‘யார்க்கர்’ நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட பிரகாசமான வாய்ப்பின் அறிகுறியாக டி.நடராஜன் இந்திய டெஸ்ட் சீருடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதனையடுத்து நெட்டிசன்கள் தரப்பில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அந்த ட்விட்டர் பதிவில், “வெள்ளைச்சீருடையை அணிவது பெருமைக்குரிய தருணம், அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரது ட்விட்டர் தளத்தில் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘தல அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நட்டு என்று அஜித் குமார் ஃபேன்ஸ் ரேஜ் என்ற ட்விட்டர்வாசி வாழ்த்துக் கூறியுள்ளார்.
இன்னும் ஒரு ரசிகர், ‘லாக்டவுன்ல நடந்த ஒரு நல்ல விஷயம் நீங்க இந்திய அணிக்கு போனது’ என்று பதிவிட்டுள்ளார்.பலரும் தமிழ்நாடு ரசிகர்களுக்கு பெருமை தரும் தருணம் என்று பதிவிட்டு வருகின்றனர்
A proud moment to wear the white jersey ???????? Ready for the next set of challenges ????????#TeamIndia @BCCI pic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021
