புதன்கிழமை, மே 6
Shadow

கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!


கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!

பொதுவாக இங்கு உள்ள இளைஞர்கள் காதலிக்கும் காதலிக்கும் பெண்களிடம் காதலை வெளிபடுத்த பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாழ்வது வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட்,கூடைப்பந்து மற்றும் கால்பந்து மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பிசியான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடன் காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.

இத்தாலி நாட்டில் உள்ள புக்லியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஒஸ்டுனி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வருபவர் கியூசெப் புங்கேண்டே, கொரோனா வார்டில் பணியாற்றிவரும் இவர் தனது அயராத பணிக்கு மத்தியில் காதலிக்கும் தனது காதலியிடம் காதலை வெளிபடுத்த முடிவெடுத்துள்ளார். இதற்காக தான் அணிந்திருந்த கொரோனா பாதுகாப்பு உடையின் பின்புறம் “கார்மெலி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா” ஆம் மற்றும் இல்லை என எழுதி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதில் இறுதியாக அந்த இளம் சுகாதார ஊழியரின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அவரது காதலி கார்மெலி காதலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது அயராத பணியிலும் தன் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியருக்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

343 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன