வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

சத்குரு தெரிவித்த ஆன்மீகத்தின் நோக்கம் – இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சமந்தா!

சத்குரு தெரிவித்த ஆன்மீகத்தின் நோக்கம் – இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா.

சமீபத்தில் சத்குருவை சந்தித்த நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதைப்பற்றி பதிவிட்டுள்ளார். “ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வது தான். இது ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு.

அறிவு மட்டும் சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்து ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும் போது நீங்கள் உண்மையாகவே அறிவு ஒளியை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்” என சமந்தா தெரிவித்துள்ளார்.

152 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன