வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மதுரை வந்திருந்தார். அவரின் பயணத்தின் ஒரே நோக்கம் அவனியா புரம் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிப்பது மட்டுமே.

டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி மதுரை வந்தார் ராகுல். அதன்பின் காரில் அவனியாபுரம் சென்ற ராகுல் அங்கே ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தார். அப்போது பேசிய ராகுல், ‘இந்த விழாவில் இளைஞர்கள் கட்டுப்போப்பாகவும் பாதுகாப்பாவும் பங்கேற்பது மகிழ்ச்சி. நான் இங்கே வந்தது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளவே’ என்று தெரிவித்தார். மாடு பிடி வீரர்கள் தடுப்பில் ஏறி ராகுல் காந்தியோடு போட்டோ எடுக்க முயன்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத்தடுக்க என்றபோது ராகுல்காந்தி அதிகாரிகளைத் தடுத்து மாடு பிடி வீரர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார்

ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் காந்தி பார்வையிட்ட போது திமுகவின் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். ராகுல் காந்தி பேசியதும் உதயநிதியும் சில நிமிடங்கள் பேசினார். அது முடிந்ததும் இருவரும் அரசியல் குறித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

 

396 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன