வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருநது தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 139 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்த நடுநடுக்கம் பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான கருதப்படும் தவாயோ நகரில் உணரப்பட்டுள்ளதுது. இங்குள்ள வீடுகள் ஆட்டம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் உண்டான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன