
தேர்தலின்போது எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள்- மம்தா எச்சரிக்கை
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். பாஜகவுக்கு வாக்களித்தால் நீங்கள் உங்களது ‘தர்மத்தை பின்பற்ற முடியாது. நீங்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்ல வேண்டியிருக்கும், ‘ஜெய் சியா ராம்’ என்று சொல்ல முடியாது. ராமபிரான் துர்கா தேவியை வணங்குவார், ஏனென்றால் துர்கை மிகவும் உயர்வானவர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது அவர்கள் (பாஜக) கோல்தூர் பகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றார்கள் என்பது எனக்குத் தெரியும். தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, இந்த முறை எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள். உங்கள் வாக்குகளை உங்கள் விருப்பப்படி செலுத்துங்கள்.

323 Views
