ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கோவையில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

கோவையில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் நீலகிரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையம், துடியலூரில் பிரசாரம் செய்தார்.

இதற்காக நேற்று இரவே கோவைக்கு வந்த அவர் ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சென்றார். அங்கு வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் இரவு அவினாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

இன்று காலை 7 மணிக்கு மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், சிங்காநல்லூர் வேட்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ.வும் வந்தனர்.

அப்போது அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

அவருடன் அங்கிருந்த அனைவரும் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அங்குள்ள கடைகள், வாகனங்களில் சென்றவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் ரேஸ்கோர்சில் இருந்து நடந்தே நீதிமன்றம் அருகே ஓட்டலுக்கு வந்தார். அங்கு காபி குடித்து விட்டு அங்கிருந்தவர்களிடம் ஓட்டு வேட்டை நடத்தினர். அவர்களும் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் வேட்பாளர்களுடன் திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள திண்ணையில் அமர்ந்து பெண்களுடன் கலந்துரையாடி தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் ஓட்டலுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன