
திருமதி இலங்கை அழகி புஷ்பிகாவுக்கே பட்டம் திரும்ப வழங்கப்பட்டது!
2021-ம் ஆண்டுக்கான திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகா டி சில்வா முதல் இடம் பிடித்தார். அவரருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை.
புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் நடத்திய போட்டியில் கரோலினா ஜூரி திருமதி உலக அழகி பட்டத்தையும் வென்றவர்.
கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது

259 Views
