வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி!

‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்காக ‘கர்ணன்’ படத்தின் சிறப்புக் காட்சி, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டது. படம் பார்த்து முடித்ததும், நடிகர் விஜய் சேதுபதி, மாரி செல்வராஜின் கையில் முத்தமிட்டு தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். “அற்புதமான படம். மனசார சொல்றேன். நீ நல்லா வருவ. லவ் யூ” என்று விஜய் சேதுபதி வாழ்த்தினார். இதனால் இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ந்து போனார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன