வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா… என்ன விசேஷம் தெரியுமா!

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா… என்ன விசேஷம் தெரியுமா!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும், இதேபோல் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா, தற்போது ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.
329 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன