தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 'மகள்'
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக உப்பேனா தெலுங்கு படம் புகழ் க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
அது மாரி 3 படமா இல்லை புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. புதுமுகம் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான உப்பேனா தெலுங்கு படத்தின் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி. உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

