வியாழக்கிழமை, செப்டம்பர் 3
Shadow

4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம்

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
அவ்வகையில், நாசா-ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் டிராகன் விண்கலத்தை நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை அமெரிக்காவின் கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், ஜப்பான், பிரான்சைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ராக்கெட்டில் இருந்து டிராகன் விண்கலம் தனியாக பிரிந்து, விண்வெளி நிலையத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் ராக்கெட் பூஸ்டர் பூமிக்கு திரும்பி தரையிறங்கியது. நாளை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையதை விண்கலம் சென்றடையும். அதன்பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் விண்கலம் இணைக்கப்படும். 4 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கியிருந்து ஆய்வு செய்வார்கள்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த ராக்கெட் மற்றும் விண்கலம் இரண்டும் மறுபடியும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வணிக ரீதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பிடும் திட்டத்தில் இணைந்துள்ளன. ஆறு திட்டத்தில் Crew-1 தான் முதல் திட்டம். நாசா இப்படி தனியார் நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து செயல்படுவதற்கு மிக முக்கியக்காரணம், மனிதர்கள் மற்றும் பொருள்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மலிவு விலையில் கொண்டு செல்வதற்க்கும் மீண்டும் பூமிக்கு கொண்டுவருவதற்கும் தான். வெற்றிகரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தனிநபர் கூட அதற்கான கட்டணத்தை செலுத்தி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுவர முடியும். இதனை வர்த்தக ரீதியிலும் அணுகிட முடியுமென நம்புகிறது நாசா.

போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் 2014 ஆம் ஆண்டு நாசா ஒரு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.  அதன்படி ஒருங்கிணைந்த விண்கலம், ராக்கெட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் மூலமாக நான்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்ல வேண்டும், எப்போதும் ஏழு பேர் கொண்ட ஒரு குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவன் மூலமாக ஆராய்ச்சியின் திறனை மேம்படுத்த முடியும் என நாசாவின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், கடந்த மே மாதம் ஒரு விளக்கப் பயணத்தை நடத்தியது. அதில் டக் ஹர்லே மற்றும் பாப் பெஹ்ன்கென், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்கள்

353 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன