புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் விழா சிறக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில், ” சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன