
காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி தகர்த்தது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலுடன், விமானப்படை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளையும் வீசி வருகிறது.

இந்த நிலையில், காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது.
அல் ஜசிரா, அசோசியேடட் பிரஸ் போன்ற சர்தேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்கள் அல்- ஜலாலா கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன. 13 மாடிகள் இந்த கட்டிடத்தை தகர்ப்பதற்கு முன்பாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கட்டிடத்தை இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் இஸ்ரேல் குண்டு போட்டு அழிக்கவுள்ளதாகவும், உடனே அதில் இருப்பவர்கள் வெளியேறும் படி கட்டிடத்தின் உரிமையாளரிடம் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நிமிடங்களில் அல் ஜலாலா கட்டிடத்தை இஸ்ரேல் குண்டு போட்டு தகர்த்துள்ளது.
395 Views
